கோடங்கிபாளையம் ஊராட்சி விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
entered on Jun 10, 2024
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் (100 நாள் வேலை) விவசாயப்பணிகள் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் விண்ணப்பங்களை கோடங்கிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் 7-6-2024 முதல் வழங்கலாம்.விண்ணப்பங்கள் கோடங்கிபாளையம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கட்டணமின்றி இலவசமாகக் கிடைக்கும்.


*விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்*:


1.பத்திரநகல்(ஜெராக்ஸ்)
2.புல வரைபடம்(FMB)
3.சிட்டா
4.அடங்கல்
5.*சிறு/குறு விவசாயி என்பதற்கான சான்று***
6.குடும்ப அட்டை நகல்
7.ஆதார் அட்டை நகல்
8.வாக்காளர் அடையாள அட்டை நகல்
9.வங்கிக் கணக்குப்புத்தக முன்பக்க ஜெராக்ஸ்
10.புகைப்படம்-3
11.தோட்டத்தின் போட்டோ (*செல்போனில் போட்டோஎடுத்துக் கொடுத்தால் ஊராட்சி அலுவலகத்திலேயே பிரிண்ட் செய்துகொள்வோம்*)
12.100 நாள் வேலை அட்டை நகல்(*அட்டை ஏற்கெனவே இருந்தால் கொடுக்கலாம்.இல்லாதவர்களுக்கு புதிய அட்டை ஊராட்சி மன்றத் தலைவரால் வழங்கப்படும்*).


100 நாள் வேலைத்திட்டத்தில் உதவி/வேலை தேவைப்படும் விவசாயிகள் நாளை முதல் ஒருவார காலத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நூறுநாள் வேலைத்திட்டப் பணியாளர்களை தங்கள் தோட்டத்திற்கு அனுப்பத் தயாராக இருக்கிறோம்.
*குறிப்பு*:விண்ணப்பித்த விவசாயிகளின் தோட்டத்திற்கு மட்டுமே 100 நாள் வேலை ஆட்களை அனுப்பமுடியும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்புடன்
*காவீ.பழனிச்சாமி*
*தலைவர்/செயல் அதிகாரி*
*கோடங்கிபாளையம் ஊராட்சி*
பல்லடம் ஒன்றியம்,திருப்பூர் மாவட்டம்